கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திரைப்பட மற்றும் நாடக துணை நடிகர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி,முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
பூச்சி எஸ்.முருகனின் முயற்சியால் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து, இன்று, பூச்சி முருகன் முன்னிலையில், தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
100க்கு மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.உடன் தயாரிப்பாளர் சாதிக், நடிகர் முத்து உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளையொட்டி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் நிதி உதவியை வழங்கினார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...