திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக வலம் வரும் உதயநிதியின் மனைவி, கிருத்திகா தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வருவது அனைவரும் அறிந்தது தான். 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி, இரண்டாவதாக ‘காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பிறகு படம் இயக்காமல் இருந்த கிரித்திகா தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி விட்டார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் (Rise East Entertainment) நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் இப்படத்தின் காளிதாஸ், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் குறித்து கிருத்திகா உதயநிதி கூறுகையில், “வணக்கம் சென்னை, காளி படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் இது. சிறந்த கதை ஒன்று அமைய வேண்டும் என்று சிறிது காலம் எடுத்து கொண்டேன், அப்போது தோன்றியது தான் இப்படத்தின் கதை. இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை, இக்கதையில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இளம் நடிகர்களை இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்க வைக்க முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரங்களுக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் தான்யா ரவிசந்திரன் கச்சிதமாக பொருந்தியிருந்தனர்.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...