தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ நேரடியாக ஒடிடி தளத்தில் வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜகமே தந்திரம் படம் ஹாலிவுட் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
சமீபத்தில், ஜகமே தந்திரம் படம் தொடர்பாக பேசுவதற்காக ட்விட்டர் ஸ்பேஷ் எனும் இணையவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டது. சோனி நிறுவனம் ஒருங்கிணைத்த இந்த உரையாடல் நிகழ்வில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் சசிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.
மேலும், இந்த உரையாடலை கேட்பதற்காக சுமார் 17 ஆயிரம் பேர் அந்த தளத்திற்கு வந்தார்கள். இதுவரை எந்த ஒரு திரைப்பட கலந்துரையாடல் நிகழ்வுக்கும் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததில்லையாம். அதனால், இது உலக அளவில் புதிய சாதனை என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக ’ஆர்மி ஆஃப் டெட்’ என்கிற ஆங்கிலப்படத்தின் உரையாடலில் அதிகம் பேர் பங்கு பெற்றனராம். தற்போது அப்படத்தை விட அதிகமானோர் ‘ஜகமே தந்திரம்’ பட உரையாடலை கேட்க வந்திருப்பதால், இதை சாதனையாக கருதுகிறார்கள். இந்த விஷயம் அறிந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...