தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், திரையுலகினர் அச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று மேலும் ஒரு இளம் நடிகர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தொரட்டி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷமன்மித்ரு. சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்கப் பதக்கம் வென்ற இவர், தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும், நடிகராக வேண்டும் என்பதற்காக ‘தொரட்டி’ என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்து பாராட்டு பெற்றார்.
அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன்மித்ரு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
43 வயதாகும் நடிகர் ஷமன்மித்ருவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், மோக்ஷா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...