கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ இன்று நெட்பிளிக்ஸ் என்ற ஒடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இதன் மூலம் 17 மொழிகளில் 190 நாடுகளில், சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை சென்றடைய உள்ளது.
இந்த நிலையில், படம் ரிலீஸாவதை தொடர்ந்து தயாரிப்பாளர் சசிகாந்த், நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த பங்குதாரர்கள், இயக்குநர், நடிகர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒத்துழைப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பல்வேறு தடைகளை தாண்டி இந்த கனவு படத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் படக்குழுவினர் நிஜமாக்கியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகள் முன்பு 'ஜகமே தந்திராம்' அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டதிலிருந்து இன்று வரை படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
படம் வெளியாவதற்கு தாமதம் ஆனாலும் எங்கள் மீது அன்பு செலுத்திய உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் ஊக்கமே எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
உங்கள் அன்பை நீங்கள் எவ்வாறு பொழிந்தீர்கள், இந்த படம் தொடங்கியதிலிருந்தே எவ்வாறு கொண்டாடினீர்கள் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்.
'ஜகமே தந்திராம்' இன்று உங்கள் இல்லம் தேடி வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் இதை பார்த்து, ரசித்து உற்சாகம் அடைவீர்கள் என்று நம்புகிறோம்!” என்று தெரிவித்துள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...