Latest News :

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய லைகா நிறுவனம்
Saturday June-19 2021

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, அறிமுக இயக்குநர்கள் மற்றும் வளர்ந்து வரும் நாயகர்களை வைத்தும் திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

 

இந்த நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

 

Lyca Productions

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இயக்குநர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

Related News

7574

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery