சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். கை நிறைய படங்களோடு பிஸியாக இருந்தாலும், அவ்வபோது இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதற்காகவே இயக்குநர் சீனு ராமசாமி, அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ என சீனு ராமசாமி இயக்கத்தில் இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஐந்தாவது முறையாக நடிக்க இருப்பதோடு, அப்படத்தின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியை தயாரிப்பாளராகவும் மாற்றியுள்ளாராம்.
அதாவது, விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இணையும் புதிய படத்தை கலைப்புலி தாணு தயாரித்தாலும், அவர் நேரடியாக தயாரிக்காமல், பணத்தை கொடுத்து முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரிக்கிறாராம். அதனால், இயக்குநர் சீனு ராமசாமி, படத்தின் தயாரிப்பாளராக இருந்து படத்தை தயாரிக்கவும் செய்கிறாராம்.
இதற்காக தயாரிப்பாளர் தாணு ரூ.20 கோடி கொடுக்க இருப்பதாகவும், அதில் ரூ.10 கோடியை விஜய் சேதுபதிக்கு சம்பளமாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.10 கோடியை வைத்து முழு படத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...