விஜய் நடிக்கும் 65 வது படத்தை ‘கோலமாவு கோகிலா’ மற்றும் வெளிவராத ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்தது.
தற்போது இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு, பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றை உருவாக்கி வருகிறார்களாம். அந்த செட்டில் தான் சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த நிலையில், விஜயின் பிறந்தாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அப்படத்தின் முதல்பார்வை மற்றும் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் என்றால் தமிழில் விலங்கு என்று அர்த்தமாம்.
விஜயின் முந்தைய படங்களுக்கு ஆங்கில வார்த்தையை தலைப்பாக வைத்திருந்தாலும், இந்த பீஸ்ட் என்ற ஆங்கில வார்த்தை சாமாணிய மக்களிடம் அதிகமாக புழக்கத்தில் இல்லாததால், இந்த தலைப்பு ஈர்ப்பாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும், விஜய் ரசிகர்கள் இந்த தலைப்பாலும், படத்தின் பஸ்ட் லுக்காலும் பெரும் அதிருப்தியடைந்திருப்பதோடு, இந்த தலைப்பு நல்லாவே இல்லை, என்று கூறி வருத்தப்பட்டும் வருகிறார்களாம்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...