தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில், அதன் நிறுவனர் சுபாஸ்கரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் .ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் .ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வழங்கினார்.
லைகா நிறுவனத்தின் இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன், பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், தினா, ஜெ.ஸ்ரீதர், அசோக் மேத்தா, எஸ்.செந்தில்குமார், புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...