Latest News :

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்!
Tuesday June-22 2021

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் பலவற்றை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்தா நிலையில், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து, சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பூ, பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

குழந்தையின் அழுகையைக் கேட்டு பசியறிந்து பாலூட்டும் தாய் உள்ளம் கொண்ட ஒரு சிறந்த தலைவர். நாட்டை நல்வழிப்படுத்தும் நல்ல அரசர் தாங்கள். வெற்றி பெற்றதைக்கூட கொண்டாடாமல் உங்களுடன் உங்களது பிறப்புகளையும் கொண்டாடவிடாமல் மக்களுக்கு சேவை செய்வது போற்றுவதற்கு உரியது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய், மற்றும் 14 உணவு பொருட்கள், தமிழறிஞர்களே எதிர்பார்க்காத வண்ணம் அவர்களுக்கு தந்த மரியாதை, கொரோனா உயிர் கொல்லியை அழிக்க போராடிக் கொண்டிருக்கும் உங்களது சேவை சரித்திரம் தானே எழுதிக் கொள்ளும்.

 

எப்போது பார்த்தாலும் அரசிடமும் வசதிபடைத்தவரிடமும் உதவி கேட்க கூச்சப்படுபவன் கலைஞன், உழைக்க வேண்டும், உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதுதான் படைப்பாளியின் குணம். அவர்களது தேவை அறிந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

தங்களுக்கும் தங்களது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

7580

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery