வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ”மெர்ஸைலா...” என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த பாடல் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட். இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன். அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம். அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும்.
கார் ஓட்டுற காட்சி ஒன்னை படமக்குறப்போ, நான் வேகமா ஓட்டுவேன், அதனால ஒன்ஸ்மோர் கேட்டுறாதீங்கன்னு சிம்பு சொன்னார். அந்த காட்சியை ஒரே டேக்ல படமாக்கினோம். இந்தப்படத்துல சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு. அதனால அவருக்குன்னு புதுசா ஏதாவது பஞ்ச் டயலாக் எழுதுன்னா, இந்த கேரக்டர் இப்படி பேசுனா சரியா வருமான்னு பஞ்ச் பேச தயங்குவாரு, விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி, நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்.
சிம்பு-எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார். ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு மாநாடு மாதிரி ஒரு காட்சியை படமக்குனோம். இந்த காட்சியோட பிரமாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும். சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்.” என்றார்.
நடிகர் சிலம்பரசன் பேசுகையில், “வெங்கட்பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு. மாநாடு படத்தை பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு, அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு. வெங்கட்பிரபு விளையாட்டான ஆளு, ஆனா இந்தப்படம் பார்த்ததும் நீங்க தான் இந்த படத்தை எடுத்தீங்களான்னு அவர்மேல ஆச்சர்யம் வரும். கல்யாணி சூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க, அவங்க சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க, சினிமா பத்தி தெரியும்னாலும் இன்னும் நிறைய கத்துக்க விரும்புறாங்க. எஸ்ஜே சூர்யா ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா கிழிச்சிருக்காங்க. அவங்க நடிச்சதை பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன். நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல ரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன். இந்தப்படத்தை தியேட்டர்ல பாக்குற ரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்ஜே சூர்யாவை தூக்கிட்டு போயிருவாங்க.
இந்தப்படம் ஏன் தள்ளிப்போச்சுன்னு தெரியல. ஆனா அந்த நேரத்துல பண்ணியிருந்தா கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னு தான் சொல்வேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப்படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.
இந்தப்படத்துல சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி மன்மதன் படத்துல மொட்டை மதன் கேரக்டர் அழுதுக்கிட்டே பேசுற மாதிரி காட்சில தான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.. சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனா இப்ப அந்த காட்சிக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது, காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சு கூட அழுகைய நிப்பாட்ட முடியலை.
நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க, மோசமான படம் கொடுத்தா கழுவி ஊத்துறாங்க. இந்த மாநாடு படத்தை பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விஷயத்தை சொல்லிருக்காங்களேன்னு அந்த வேலைக்கு மரியாதை கொடுப்பாங்க. யுவன் தனித்தனி ஆல்பமும் பண்ணனும். பாலிவுட்ல அது ரொம்பவே ஹிட் ஆகியிருக்கு.. இதுதான் கரெக்ட் டைம்.” என கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ஒரு நல்ல படம் தனக்கு தேவையானவற்றை தானே தேடிக்கும்னு சொல்வாங்க, அது இந்த மாநாடு படத்துக்கு பொருந்தும். இந்த கதையை சொல்றதுக்கு முன்னாடி எஸ்டிஆரின் மாநாடு அப்படின்னு ரெண்டே வார்த்தைதான் வெங்கட் பிரபு எங்கிட்ட சொன்னார். அதுக்கப்புறம் தான் கதையை தாமதமாகத்தான் சொன்னார். இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான சமயத்துல பல நெகடிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும், இந்தபடம் தள்ளிப்போனதால பல நன்மைகள் நடந்திருக்கு. சிம்பு வெயிட் லாஸ் பண்ணினார். எஸ்ஜே சூர்யா இந்தப்படத்துக்குள்ள வந்தார். சிம்பு தன்னை பத்தி பேசப்பட்ட அத்தனை தவறான விஷயங்களையும் அடிச்சு காலி பண்ணிட்டார். மற்ற படங்கள்ல கல்யாணியைப் பார்த்ததுக்கும் இந்தப்படத்துல பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.
ஒவ்வொருநாளும் ஸ்பாட்ல கூடவே இருந்துருக்கேன்.. அத்தனை பேரோட உழைப்பையும் நேர்ல பாத்துருக்கேன். படம் முடிஞ்சு பார்க்கும்போது நாம உழைச்ச உழைப்பு வீணாகல அப்படின்னு ஒரு திருப்தி வந்துச்சு. சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே இது பெரிய படமா இருக்கும்” என்றார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...