தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறியப்பட்ட புகழ், ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். இதுவரை சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காமெடி நடிகர் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன் புகழ் திருமணம் செய்துக் கொண்டாராம். ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் புகழின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.
தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் புகழ், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர வாய்ப்பு இருப்பதால், அவருடைய சினிமா வாழ்க்கைக்கு திருமண தகவல் சிக்கலாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவருக்கு திருமணம் நடந்ததை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...