விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கும் வெற்றிமாறன், தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசனுடன் இணைந்து வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
‘அதிகாரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. இந்தியா மற்றும் மலேசியாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...