Latest News :

ஒடிடி-யில் வெளியான பிரபாகரனின் வாழ்க்கை படம் ‘மேதகு’!
Friday June-25 2021

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து ’மேதகு’ என்ற தமிழ் திரைப்படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலகத்தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றார் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம்பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குநர். 

 

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை மெருகூட்டியுள்ளனர். இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணைபுரிந்துள்ளனர்.

 

இந்த திரைப்படம் BS value என்கின்ற இணையவெளி திரையில் (OTT) ஜூன்-25 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த மேதகு திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது. 

 

தமிழர்களின் வரலாற்றை கலைவடிவில் கண்முன்னே படம் பிடித்துக்காட்டப்போகும் 'மேதகு' போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.

Related News

7588

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery