திரைப்படங்களின் தலைப்புகளில் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, ‘சின்னத்தம்பி’ என்ற தலைப்பில் புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த சின்னத்தம்பி சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
யார் இந்த சின்னத்தம்பி? வீரமும், பாசமும் நிறைந்த, அம்மா பிள்ளை. பெண்களை கண்டா தூர ஓடுற கிராமத்து வெகுளி பையன் தான் நம்ம சின்னத்தம்பி. மொத்தத்தில் சின்னத்தம்பி என்பவன் பெண்கள் அனைவரும் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்று நினைக்கும் ஒரு கனவு நாயகன். மற்றொருபக்கம், பணக்கார திமிர் பிடித்த மாடர்ன் சிட்டி பெண் நந்தினி. ஆனால் நல்ல மனம் படைத்தவள்.
இப்படி முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும். இவர்கள் காதலர்கள் ஆவார்களா? இந்த இரு துருவங்கள் கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும்?
இதில் சின்னத்தம்பியாக காதலிக்க நேரமில்லை தொடரின் புகழ் ப்ரஜன் நடிக்கிறார். மேலும், நந்தினியாக ரெட்டை வால் குருவி புகழ் பாவனி ரெட்டி அவர்கள் நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் திரு. அருள் ராசன் அவர்கள். இந்த குடும்ப தொடருக்கு இசை அமைக்கிறார் தொலைக்காட்சியின் பிரபல இசை அமைப்பாளர் இளையவன் அவர்கள்.
இந்த இரு வேறுபட்ட கதாபாத்திரங்களின் கல்யாணம், காதல், வாழ்க்கை. அவர்கள் சார்ந்த இரு குடும்பங்களின் கலாச்சார மோதல்கள், பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உணர்வுகளின் கொண்டாட்டமாய் உங்கள் இல்லங்களில் நம் விஜய் டிவியில். இனி தினந்தோறும் இரவு 10 மணிக்கு.. காணத்தவறாதீர்கள்!
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...