Latest News :

சினிமா மீடியேட்டர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதயநிதி!
Saturday June-26 2021

திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ளாத வகையில் தனது அதிரடி நடவடிக்கைகளால் எம்.எல்.ஏ-க்களின் சூப்பர் ஸ்டாராக திகழும் உதயநிதிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி மக்கள் கோவில் மட்டும் தான் கட்டவில்லை, அதை தவிர்த்து அவரை ஒரு கடவுள் அவதாரமாகவே பாவித்து வருகிறார்கள்.

 

இப்படி தனது தொகுதி மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் உதயநிதி, தனது சினிமாதுறையில் உள்ளவர்களுக்கும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது பல உதவிகளை செய்தார்.

 

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதுறையினருக்கு மீண்டும் உதவி செய்ய தொடங்கியிருக்கிறார். அதன்படி, திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் மீடியேட்டர்கள் சங்கத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் சார்பில் இன்று வழங்கினார்.

 

Udhayanidhi

 

இந்த நிகழ்வில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாள செண்பகமூர்த்தி, விநியோக நிர்வாகி சி.ராஜா, தயாரிப்பு நிர்வாகி இ.ஆறுமுகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Related News

7590

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...