திரைத்துறையை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையினரின் படைப்பு சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ் திரையுலகினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சட்ட திருத்தத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வலையை நெறிப்பதற்காக அல்ல” என்று பதிவுட்டுள்ளார்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...