சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் 'ரெஃபெக்ஸ் குரூப்', தனது 'ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்' நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சோலோ'. துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் அறிமுக பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. துல்கர் சல்மான் பிறந்த நாளன்று நடந்த இந்த சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சோலோ தான் என் முதல் மற்றும் உண்மையான தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவை தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது என்றார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.
எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குனர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நல்ல படங்களை எப்போதுமே கொடுக்க முனைகிறேன். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார்கள். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை எடுப்பது 8 படத்தில் நடிப்பதற்கு சமம். என் மூன்று தமிழ் படங்களின் விழாவிலும் மணிரத்னம் சார் இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. நான் மிகவும் அதிர்ஷமாக உணர்கிறேன் என்றார்
படத்தின் நாயகன் துல்கர் சல்மான். 2 மொழிகளில் இந்த படத்துக்கு மொத்தம் 30 பாடல்கள். நாங்கள் 1 பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம். துல்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றார் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்.
இப்போது பிஜாய் நம்பியார் காட்டியது தான் படத்தின் உண்மையான முன்னோட்டம். இந்த முன்னோட்டம் அருமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது என்றார் இயக்குனர் மணிரத்னம்.
இந்த படத்தின் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...