Latest News :

அது ஒரு பொய்யான புகார்! - நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்
Friday July-02 2021

திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீது வீணா என் பெண் சமீபத்தில் பண மோசடி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் மனுவில், தனது கணவருக்கு ரூ.10 கோடி கடன் பெற்று தருவதாக கூறி, அதற்காக ரூ.1 கோடி பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ், சொன்னது போல் கடனும் வாங்கி கொடுக்கவில்லை, வாங்கிய ரூ.1 கோடியையும் திருப்பி கொடுக்கவில்லை, என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், வீணாவின் புகார் தொடர்பாக இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளித்ததோடு, தன் தரப்பு ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.

 

மேலும், இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், “நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்.

 

நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால், நான் வாழ்ந்த வீட்டை விற்றேன். நான் விற்றேன் இன்னொருவர் வாங்கினார். இவ்வளவு தான் இதிலுள்ள விஷயம்.

 

நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்?, அதில் நான் ஏன் மோசடி செய்ய வேண்டும்?, இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்? 

 

என் மீதான இந்த பொய்ப்புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான  புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்.

Related News

7602

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...