விவாகரத்து மற்றும் மறுமணம் கலாச்சாரங்கள் நாட்டில் அதிகரித்து வந்தாலும், அதிகமான வயது வித்தியாசம் உள்ளவர்கள் தம்பதிகளாக இணைவது அவ்வபோது அரங்கேறி வருகிறது. அந்த வகையில், முன்னணி நடிகர் ஒருவர், தனக்கு மகளாக நடித்த நடிகையை தனது மூன்றாவது மனைவியாக்கி கொள்ள இருக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், இந்தி சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அமீர்கானுக்கு, இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் அமீர்கான், சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில், அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த சனா ஷேக் தான் அமீர்கானின் மூன்றாவது மனைவியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தங்கல் படத்தில் நடித்த போது அமீர்கானுக்கும், சனா ஷேக் இடையிலான நட்பு காதலாக மாறியதோடு, அவர்கள் சேர்ந்து ஏகப்பட்ட விருந்துகளில் பங்கேற்று வந்துள்ளனர். இதன் காரணமாக அமீர்கானுக்கும் அவருடைய மனைவி கிரண் ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்திருக்கும் அமீர்கான் விரைவில் சனா ஷேக்கை மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
56 வயதாகும் நடிகர் அமீர்கான், 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருக்கிறார் என்கிற தகவல் பல நாட்களாக ஊடங்கங்களில் வெளிவந்துக் கொண்டிருந்தாலும், அமீர்கான் மற்றும் சனா ஷேக் தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்காமல் இருப்பதே அவர்களின் திருமண தகவல் உண்மை என்பதற்குச் சான்று என்கிறார்கள்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...