ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விதிமதி உல்டா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கும் இப்படத்தில், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்க, பாடல்கள் அனைத்தையும் கபிலன் எழுதியுள்ளார். இதில் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். “தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா...ஏறுமாறா என்னை அடித்து தூக்க...” என்ற அந்த பாடலின் டீசர் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுட்ள்ளார்.
ஏற்கனவே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ள இந்த பாடலின் வீடியோ டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் இந்த பாடலின் முழு வீடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...