இயக்குநர் சசிகுமார் அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பாடல் பதிவு பூஜையுடன் தொடங்கியது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை அன்பறிவு வடிவமைக்கிறார்கள்.
பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் மிகுந்த பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமப் பின்னணியில் பிரம்மாண்ட, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...