’ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கினாலும், வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி பெறும் படங்கள் கொடுப்பதில் கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யாவை வைத்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தை இயக்கியவர், அதற்கு பிறகு இயக்கிய படத்தில் இயக்குநராக மட்டும் இன்றி ஹீரோவாகவும் களம் இறங்கினார்.
தற்போது இயக்குநர் பணியை மட்டுமே கவனிக்க முடிவு செய்துள்ள சந்தோஷ் பி.ஜெயக்குமார், பிரபு தேவாவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை துவக்கியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
பிரபு தேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...