Latest News :

கருணாஸ் மீண்டும் நாயகனாக களம் இறங்கும் ‘ஆதார்’! - படப்பிடிப்பு தொடங்கியது
Friday July-16 2021

காமெடி நடிகராக அறிமுகமாகி சில படங்களில் கதையின் நாயகனாக நடித்த கருணாஸ், திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். பிறகு அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியதால் நடிப்பதை சற்று ஒதுக்கி வைத்தவர், கடந்த ஆண்டு முதல் மீண்டில் நடிப்பில் தீவிரம் காட்ட தொடங்கினார். இதையடுத்து ‘சூரரைப் போற்று’, ‘சங்கத்தலைவன்’ போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து பாராட்டு பெற்றார்.

 

இந்த நிலையில், மீண்டும் கதையின் நாயகனாக கருணாஸ் களம் இறங்கியுள்ளார். ‘ஆதார்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். கருணாஸ் ஹீரோவாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ஜீவா, நயன்தாரா நடித்த ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார்.

 

இப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீபன், பாகுபலி புகழ் பிரபாகர், மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, நிர்வாக தயாரிப்பாளராக ஏ பி ரவி பணியாற்றுகிறார். 

 

வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கும் ‘ஆதார்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

Related News

7633

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery