Latest News :

குடிக்கு அடிமையான அமலா பால்! - ரசிகர்கள் அதிர்ச்சி
Tuesday July-20 2021

ஹீரோக்களுடன் டூயட் பாடும் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய அமலா பால், தற்போது நடிகைகளை மையப்படுத்திய திரைப்படங்களில் சவால் மிக்க கதாப்பாத்திரங்களில், தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் பாராட்டு பெற்று வருருவதோடு, தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாகவும் உருவெடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிட்ட கதலு’ என்ற தெலுங்கு இணைய தொடர் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அமலா பாலுக்கு பல தரப்பு பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இத்தொடரை தொடர்ந்து பிரபல கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் வடிவில் உருவாகியிருக்கும் ‘குடி யெடமைத்தே’ (Kudi Yedamaithe) என்ற மற்றொரு தெலுங்கு இணைய தொடரில் அமலா பால் நடித்திருக்கிறார்.

 

குடிக்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் அமலா பால் நடித்திருக்கும் இந்த தெலுங்கு இணைய சமீபத்தில் அஹா (Aha) ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு வேடத்தில் அமலா பால் நடிக்கிறார், என்ற தகவல் வெளியான உடன், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், தற்போது அமாலா பாலின் கதாபாத்திரத்திற்கும், அவருடைய நடிப்பிற்கும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

 

குடிக்கு அடிமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தது குறித்து அமலா பால் கூறுகையில், “நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்கவே விரும்புகிறேன். தற்போது என்னை நானே புதிப்பித்து கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனித்த முறையில்  பாராட்டுக்கள்  கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிகுந்த கவனத்துடன் தான், நான் நடிக்கும் படைப்புகளை தேர்வு செய்து வருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது.

 

’பிட்ட கதலு’ தொடர் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம் தான், இயக்குநர்  பவன்குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. சிக்கலில் சிக்கிகொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தாண்டி, இதில் என்ன சுவார்ஸ்யம் இருக்கிறது என கேட்டேன், இந்த துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத்துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பவன்குமார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் எழுத்தும் அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்த வரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்து இருக்கிறது. இந்த தொடரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கிறது. இது டைம் லூப் சயின்ஸ் பிக்சன், ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் என் கதாப்பத்திரத்தை கொண்டாடி வருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி

 

தற்போது  பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், பாலிவுட் 1970 காதல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் Cadaver திரைப்படமும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் நீங்கள் ரசிக்க முடியும்.” என்றார்.

Related News

7639

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...