தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஹரிஷ் கல்யாண், சினேகன், பிந்து மாதவி, கணேஷ் வெங்கட்ராம், ஆராவ் என ஐந்து போட்டியாளர்கள் எஞ்சியுள்ள நிலையில் இவர்களில் யார் வெற்றியாளர்? என்பது தெரிய இன்றும், நாளையும் என இரண்டு நாட்களே உள்ளதால், மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை பிந்து மாதவி, ரூ.10 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்படி காட்டப்பட்டது நிகழ்ச்சியின் புதிய திருப்பமாக அமைந்தது.
நேற்று ஒளிபரப்பப்பட்ட 27 புரோமோவில், பிக் பாஸ் இங்கு ரூ.10 லட்சத்திற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் உள்ள 5 போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும், விளையாடியது போதும் என நினைப்பவர்கள் இந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு இங்கிருந்து கிளம்பலாம். அந்த தொகை வெற்றியாளருக்கு வழங்கப்படும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும், என்று கூறினார்.
இதையடுத்து, அந்த பெட்டியை நடிகை பிந்து மாதவி எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறுவது போல இருந்தது. ஆனால், உண்மையில் போட்டியாளர்கள் 5 பேரும் அந்த பெட்டியை எடுக்க விருப்பமில்லை என்று கூறியதை தொடர்ந்து, அந்த பெட்டியை பிக் பாஸ் அறையில் வைப்பதற்காக பிந்து மாதவி எடுத்துச் என்றார்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...