Latest News :

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘அரண்மனை 3’!
Friday July-23 2021

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகம் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது.

 

ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முழுமையாக முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளின் பணி நடைபெற்று வந்தது. தற்போது கிராபிக்ஸ் பணி உள்ளிட்ட படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயராகி விட்டது. இதையடுத்து இயக்குநர் சுந்தர்.சி வெளியீட்டு பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

 

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட  பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது. 

 

ஆவ்னி சினிமேக்ஸ் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். குருராஜ் கலையை நிர்மாணிக்க, பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

7648

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery