’யாமிருக்க பயமே’ என்ற பேய் பேய் படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிறிக்க வைத்த இயக்குநர் டீகே, ஓவியாவை காட்டேரியாக்கியுள்ளார். ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு ஜீவாவை வைத்து ‘கவலை வேண்டாம்’ படத்தை இயக்கியவர், தான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ‘காட்டேரி’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஆதித்யா நடிக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து வரும் சாய்குமாரின் மகன் ஆவார்.
இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...