கொரோனா பரவல் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால், பல படங்கள் ஒடிடி-யில் வெளியாகி வருகிறது. அதேபோல், சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘திட்டம் இரண்டு’ படம் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஒடிடியில் வெளியான நிலையில், அவருடைய மற்றொரு புதிய படமான ‘பூமிகா’ நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.
ஸ்டோன் பென்ஞ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பூமிகா’. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
திகில் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் மக்களை சென்றடையும் தளத்தில் திரைப்படத்தை வெளியிடுவது மிக முக்கியம். விஜய் டிவி பிரீமியர் மூலம் நிச்சயம் எண்ணற்ற மக்களை இப்படம் சென்றடையும். ஒரு படம் அதிக ரசிகர்களை சென்றடைவதே படைப்பாளியின் இறுதி நோக்கமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலான, நட்சத்திர நடிகர்களின் நடிப்பால், அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள, இந்த படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷுடன், பாவல் நவகீதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள்ள இப்படத்திற்கு ரொபேர்ட்டோ சஷ்ஷாரா (Roberto Zazzara) ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்துள்ளார்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...