Latest News :

தமிழர்களின் எதிரியாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி! - புகைப்படத்தால் பரபரப்பு
Monday August-02 2021

தமிழர்களுக்கு ஆதரவாக அவ்வபோது பேசும் தமிழ் சினிமா நடிகர்கள் தான், பின்னாலில் தமிழர்களை சீண்டும் செயலில் ஈடுபடுவதோடு, அவர்களுக்கு எதிரியாகவும் உருவெடுப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

 

தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருவதோடு, சுமார் ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் கதாநாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். 

 

நல்ல நடிகர் என்று பெயர் எடுத்த விஜய் சேதுபதி, அவ்வபோது சமூகத்தைப் பற்றியும், குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவாகவும் பேசி வருவார். இதனால், இவர்களுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கவும் செய்தது.

 

இதற்கிடையே, ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், இதற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இதை கண்டுக்கொள்ளாத விஜய் சேதுபதி, பட வேலைகளில் மும்முரம் காட்டி வந்த நிலையில், தமிழகத்திலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப, அப்படத்தில் இருந்து விலகினார்.

 

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்ததோடு, தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இருந்தது. இதற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களையும் நடத்தினார்கள்.

 

ஆனால், இந்த வெப் சீரிஸ் இன்னமும் அமேசானில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து, இந்த வெப் சிரிஸில் நடித்த நடிகை சமந்தா, மைம் கோபி, அழகம்பெருமாள் போன்ற தமிழ் நடிகர்களை புறக்கணிக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ‘தி பேமிலி மேன் 3’ வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

 

ஆனால், இதை விஜய் சேதுபதி தரப்பு மறுத்து வந்த நிலையில், தற்போது ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்கள் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

 

ஆம், தமிழர்களை கொச்சைப்படுத்திய ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோரின் அடுத்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அந்த இயக்குநர்களே தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதோடு, விஜய் சேதுபதியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

Vijay Sethupathi in The Family Man 3

 

’தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் தமிழர்களை கொச்சைப்படுத்திய இயக்குநர்கள் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால், அவர் தமிழர்களை சீண்டிப்பார்ப்பதாக கருத்துகள் எழுந்துள்ளனர்.

 

மேலும், தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் விஜய் சேதுபதி, தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பதால், அவருக்கு தமிழர்களின் வலியும், அவர்களின் வேதனையும் புரியவில்லை, என்றும் கூறப்படுகிறது.

 

இப்படியான கருத்துக்களினால் விஜய் சேதுபதி, தமிழர்களின் எதிரியாக உருவெடுத்து வருகிறார்.

Related News

7662

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery