Latest News :

ஆண்ட்ரியாவின் நிர்வாண புகைப்படமா? - ‘பிசாசு 2’ எழுப்பிய கேள்வி!
Tuesday August-03 2021

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘பிசாசு 2’ என்ற தலைப்பில் மீண்டும் ஒரு திகில் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

இதற்கிடையே, இப்படத்தின் காட்சி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் ஒன்று கசிந்த நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

 

இயக்குநர் வெற்றிமாறன் ‘பிசாசு 2’ பஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில், பெண் ஒருவர், குளியல் அறையில் குளியல் தொட்டியில் இருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. ஆனால், அதில் அவருடைய கால்கள் மட்டுமே தெரிகிறது.

 

இந்த நிலையில், இந்த பஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அது ஆண்ட்ரியாவின் நிர்வாண புகைப்படமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Pisasu 2

 

ஏற்கனவே, ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக வெளியான தகவலால் படம் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதை நிரூபிக்கும் வகையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

7663

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery