Latest News :

லைகா தயாரிப்பில் சற்குணம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Wednesday August-04 2021

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ‘பொன்னியின் செல்வன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருவதோடு, வளர்ந்து வரும் இயக்குநர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் பல படங்களை தயாரித்து வருகிறது.

 

அந்த வகையில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

 

அதர்வா முரளியுடன் ராஜ்கிரண் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே,  சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.

 

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முஹம்மது படத்தொகுப்பு செய்ய, ஜே.கே ஆண்டனி கலையை நிர்மாணிக்கிறார். விவேகா மற்றும் மணி அமுதவன் பாடல்கள் எழுத, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பாபி ஆண்டனி நடனம் அமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன் இப்படத்தை வடிவமைக்கிறார்.

 

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தஞ்சையில் தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.


Related News

7664

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery