'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பொய்க்கால் குதிரை'. இந்தப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் 'பிக்பாஸ்' பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...