மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாளப் படம்’ வெளிப்பாடின்றே புஸ்தகம்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தில் இடம்பெற்ற “ஜிமிக்கி கம்மல்...” என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.
கேரளா மட்டும் இன்றி, தென் இந்தியா முழுவதும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், “ஜிமிக்கி கக்கல்...” பாட்டும், நடனமும் இல்லாமல் இல்லை.
சங்கதி அதுவல்ல, இந்த பாடல் இடம்பெற்ற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த நடிகை அன்னா ராஜனை, மம்முட்டி கதறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் நடித்து வரும் புதுப்படம் ஒன்றின் விழாவில் பங்கேற்ற நடிகை அன்னா ராஜனிடம், ”நீங்கள் மோகன் லாலுடன் ஜோடியாக நடித்து விட்டீர்கள். நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர்சல்மான் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிப்பீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகை அன்னா ராஜன், ”துல்கர்சல்மான் கதாநாயகனாக நடித்தால் மம்முட்டி தந்தை வேடத்தில் நடிப்பாரா? அல்லது மம்முட்டி கதாநாயகனாக நடித்தால் துல்கர்சல்மான் தந்தையாக நடிப்பாரா?” என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
அன்னா ராஜனிடன் இந்த பதிலுக்கு மம்முட்டி ரசிகர்களும், துல்கர்சல்மான் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால் வருத்தமடைந்துள்ள நடிகை அன்னா ராஜன், பேஸ்புக் லைவில் தோன்றி, கதறி அழுதவாறே, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நான் ஜாலியாக தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. ஆனாலும் மம்முட்டி, துல்கர்சல்மான் ரசிகர்களிடம் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியவர் அந்த வீடியோவில் கதறி அழுதவாறே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள கேரள சினிமாவில் ஹீரோயின் ஒருவர் அழுதபடியே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...