சினிமாவில் நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தின் வியாபாரமும், லாபமும் அமையும். ஆனால், அதை முறியடித்து நடிகைகளினாலும் அதை செய்ய முடியும் என்று ஒரு சில நடிகைகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் சினிமாவில் அதை சில வருடங்களாக நிரூபித்து வருபவர் நயன்தாரா மட்டும் தான்.
தனது பல காதல் தோல்விகளையும் கடந்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் என்ற இயக்குநருடன் காதல் வயப்பட்டதும், அவருடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதும் வெட்ட வெளிச்சம் ஆன பிறகும், நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இதற்கிடையே நயன்தாரா தயாரித்து நடித்துள்ள முதல் திரைப்படமான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு ஒடிடி நிறுவனம் வாங்கியிருப்பது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
ஆனால், நயன்தாராவோ தனது முதல் தயாரிப்பே இவ்வளவு பெரிய லாபத்தை கொடுத்ததால் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபடுவதோடு, அப்படங்களை நேரடியாக ஒடிடி தளங்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். இதற்காக முன்னணி ஒடிடி தளம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றையும் போட இருக்கிறாராம்.
நயன்தாரா படங்களுக்கு இப்படி ஒரு மவுசா!, எப்படி அது!, என்று விசாரிக்கையில், ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திற்கு தனது நெற்றிக்கண் படத்தை நயன்தாரா, விலை பேசிய போது, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பெரிய தொகையை கொடுக்க முன்வந்த அந்த ஒடிடி நிறுவனம், கண்டிஷன் ஒன்றையும் போட்டதாம்.
அதாவது, ‘நெற்றிக்கண்’ படத்தை வாங்க நாங்க ரெடி, நயன்தாரா எங்க சேனலுக்கு பேட்டி கொடுக்க ரெடியா? என்பது தான் அந்த கண்டிஷன். இதற்கு நயன் ஓகே சொன்னது மட்டும் அல்ல, அந்த பேட்டியில் அவர்கள், எதை பற்றி கேட்கிறார்களே அதற்கு நயன், பதில் அளிக்க வேண்டும், என்பது தான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.
இப்படி ஒரு பேட்டிக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்ததால் தான், அவருடைய நெற்றிக்கண் படம் பெரிய தொகைக்கு வாங்க பட்டது. அது சரி, அந்த சேனல் அப்படி என்ன கேள்வியை கேட்க போகிறது என்று யோசிக்கிறீர்களா?, வேறென்ன நயனின் கல்யாணம் பற்றிய தகவலை தான். நயனும் கிடைத்த வரை லாபம், என்று தனது கல்யாண தகவலை வியாபரமாக்கி கோடிகளை சம்பாதிக்க தொடங்கி விட்டார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...