அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கும் சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி நாயகனாக நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடிக்க ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.
'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க, கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, அருண் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சாண்டி நடனம் அமைக்க, டோரத்தி ஜெய் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். நசீர் மற்றும் கே.எஸ்.கே.செல்வா நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...