ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ஒடிடி-யில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. அதே சமயம், தியேட்டரில் படம் வெளியாகியிருந்தால் இதை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும், ஆனால், தயாரிப்பு தரப்பு பணத்திற்கு ஆசைப்பட்டு ஒடிடி-யில் வெளியிட்டு விட்டதாக பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்ததால் சரிந்து போன நடிகர் ஆர்யாவின் மார்க்கெட்டை இந்த சார்பட்டா பரம்பரை தூக்கி நிறுத்தும் வகையில் இருந்தாலும், படம் தியேட்டரில் வெளியாகததால் ஆர்யா, இந்த வெற்றியை கொண்டாட முடியாமல் இருக்கிறார். காரணம், தியேட்டரில் வெளியாகியிருந்தால், படத்திற்கு கிடைத்த ஓபனிங் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்டை வைத்து தனது சம்பளத்தை உயர்த்தி இருக்க முடியும்.
ஆனால், ஒடிடி-யில் வெளியானதால், இந்த வெற்றி ஆர்யாவுக்கு பயன் தரமால் இருக்கிறது. இருந்தாலும், ஆர்யா இதை விடுவதாக இல்லை. சார்பட்டா பரம்பரை படத்தை தியேட்டரில் வெளியிடும் முயற்சியில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். இதற்காக அமேசான் நிறுவனத்திடம் பேசிய ஆர்யா, படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்காக அனுமதியை பெற்று விட்டதோடு, அந்த பொறுப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆர்யா போட்ட பிளான் நடந்தால், விநாயகர் சதுர்த்தியன்று சார்பட்டா பரம்பரை படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...