இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என தான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் பல வெற்றிகளைப் பார்த்த கங்கை அமரன், அவ்வபோது சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதும் உண்டு.
அந்த வகையில், ’கரகாட்டக்காரன்’, ’இதயம்’, ’உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ’சென்னை 28’, போன்ற படங்களில் நடித்திருப்பவர், தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெளரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை காட்சியில், கங்கை அமரன் ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த காட்சி காரைக்குடியில் உள்ள கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்காலிகமாக ’AV33' என்று அழைக்கின்றனர். இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படமான இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா, யோகி பாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பகல் நேரத்தில் கதைக்கான காட்சிகளையும், இரவில் சண்டைக்காட்சிகளையும் படமாக்க அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
தூத்துக்குடி மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...