சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘டிக்கிலோனா’. அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா, ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டைம் டிராவல் ஃபேண்டசி ஜானர் திரைப்படமான இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்ததோடு, சந்தானம் நாயகனாக நடித்த படங்களிலேயே இப்படத்தின் முன்னோட்டம் தான் அதிகமான பார்வையாளர்களை கடந்தது என்ற பெருமையும் பெற்றது.
இந்த நிலையில், ’டிக்கிலோனா’ படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜீ 5 ஒடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. இந்த தகவலை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...