நாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பூமிகா’. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், தற்போது சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமூக பிரச்சனையை பிரச்சனையாகவும், தீர்வாகவும் மட்டுமே சொல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக கொடுப்பதற்காகவே இப்படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இயக்கியிருப்பதாக கூறும் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத், இதுவரை வந்த பேய் படங்களில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும், என்று நான் சொன்னால் வழக்கமாக இருக்கும், ஆனால் படம் பார்க்கும் போது நான் சொன்னதை ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள், என்றார்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் படம் குறித்து பேசுகையில், ”’பூமிகா’ சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மிக ஆழமானதாகவும், தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக தேவையானதாகவும் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள் அல்லது செடி, மரம் வளர்க்க விரும்புவார்கள். மொத்தத்தில், படம் பார்ப்பவர்களுக்கு இயற்கையின் மீது பற்றும், அதை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும் நிச்சயம் ஏற்படும். அதே வகையில், முழுமையான சஸ்பென்ஸ் திரில்லர் படமாகவும் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.” என்றார்.
ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் (Stone Bench Films) ஃபேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘பூமிகா’ திரைப்படத்தின் பிரீமியர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து அன்று இரவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் வெளியாகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...