அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில், ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில், அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘லாக்டவுன்’. இதில் நாயகியாக கீதா நடிக்கிறார். இவர்களுடன் நடன இயக்குநர் சுந்தரம், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஜாசி கிஃப்ட் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, ஜாலி பாஸ்டியன், ரவி வர்மா ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்கள். சின்னி பிரகாஷ், மதன் ஹரணி ஆகியோர் நடன காட்சிகளை வடிவமைக்கிறார்கள்.
சமூக பிரச்சனையை ஜனரஞ்சகமான முறையில் சொல்லும் ‘லாக்டவுன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் தொடங்கியது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...