நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ‘காஞ்சனா’ என்ற தலைப்பில் அடுத்தடுத்த பாகங்களை இயக்கியவர் இதுவரை மூன்று பாகங்களை இயக்கியிருக்கிறார். மூன்று பாகங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது பல படங்களை இயக்கி நடித்து வரும் ராகவா லாரன்ஸ், ‘காஞ்சனா’-வின் நான்காவது பாகத்தையும் எடுக்க உள்ளார்.
இந்த நிலையில், ‘காஞ்சனா 3’-யில் பிளாஷ்பேக் பகுதியில் ராகவா லாரன்ஸின் காதலியாக நடித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த மாடலும், நடிகையுமான அலெக்ஸாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
24 வயதாகும் நடிகை அலெக்ஸாண்ட்ரா, கோவாவில் உள்ள தனது வீட்டில் கடந்த வியாழனன்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
தனது காதலருடன் கோவாவில் வாழ்ந்து வந்த நடிகை அலெக்ஸாண்ட்ரா, காதலரை பிரிந்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அவருடைய மரணத்தை மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்திருக்கும் கோவா போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...