தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கிறது ‘தலைவி’. இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்ததால் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், ‘தலைவி’ படக்குழு வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘தலைவி’ வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...