அறிமுக இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் படம் ‘என்னங்க ஆர் உங்க சட்டம்’. ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய மூன்று போஸ்டர்கள் படத்தின் மீது மிக்கப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், படத்தின் கருவை விளக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் இருப்பதோடு, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படியும் அமைந்துள்ளது.
படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததாகவும், இரண்டாம் பகுதியில் ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை தீவிரமாக பேசப்பட்டிருக்கும் இப்படம், தமிழ அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வெளியாவதற்கு முன்பாகவே அனைத்து பணிகளையும் முடித்து, தணிக்கையில் யு/ஏ சான்றிதழையும் பெற்றுவிட்டது. ஒரு பக்கமாக அல்லாமல், இரு தரப்பு நியாயங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பை எக்காரணம் கொண்டும் மாற்றப் போவதில்லை, என்பதில் படக்குழு உறுதியாக உள்ளனர்.
இப்படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரோகினி, ஆர்.எஸ்.கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...