பிரபல நடன இயக்குநரும் நடிகரும் இயக்குநருமான ரகுராமின் வாரிசுகள் திரைத்துறையில் மட்டும் இன்றி அரசியலிலும் அதிரடி காட்டி வரும் நிலையில், இந்திய சினிமாவையும் கடந்து ஹாலிவுட்டில் அவரது மகள் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடன இயக்குநர்கள் ரகுராம் - கிரிஜா தம்பதியின் மகளான சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றார். தனது பெற்றோர் போல் நடனத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர், நடிப்பிலும் ஒரு ரவுண்ட் வந்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த சுஜா, கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.
தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் செட்டிலான சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணியாற்றியதோடு, ஹாலிவுட்டில் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.
இசையை மையமாக வைத்து ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து இயக்க இருக்கும் சுஜா, அதில் தனது மகன்கள் திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார். ’டேக் இட் ஈசி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் நட்பை மையமாக வைத்து உருவாகிறது.
சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது. திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் மூலம் சுஜா ஹாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவதுடன், பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் சினிமாவில் நுழைகிறார்கள் என்பதையும் தாண்டி, கே.சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...