’எனிமி’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களை முடித்துள்ள விஷாலின், புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பொன் பார்த்திபன், ஏ.வினோத்குமார் வசனம் எழுதுகின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படம் சுனைனாவின் சினிமா வாழ்வில் முக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...