Latest News :

நடிகர் விஷாலின் தந்தைக்கு கிடைத்த கவுரவம்!
Friday September-03 2021

நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது.

 

இந்த நிலையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபிட் இந்தியா’ (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Vishal Father GK Reddy

 

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமான ஃபிட் இந்தியாவை மக்கள் இயக்கமாக மாற்றுவதே பிரதமரின் நோக்கமாகும். இதன் மூலம் அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

 

மேலும், இந்த இயக்கத்திற்காக இந்தியாவில் உடற்பயிற்சியில் சிறந்து விளங்கும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களை தூதுவர்களாக ஃபிட் இந்தியா தேர்வு செய்து வருகிறது.

 

அதன்படி, திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜி.கே.ரெட்டி அவர்கள் ஃபிட் இந்தியா இயக்கத்தில் தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வருடத்திற்கு ஃபிட் இந்தியா சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு உடற்பயிற்சியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்.

 

GK Reddy in Fit India Ambassador

Related News

7710

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery