விஜய் சேதுபதி நடிப்பில், எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதியும், ஆறுமுக குமாரும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தனது ஒவ்வொரு படங்களிலும் சமூக பிரச்சனைகளை மிக அழுத்தமாக பேசியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இந்த படத்தில் நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் மறைந்தாலும், அவர் படங்கள் பேசியிருக்கும் சமூக சீர்த்திருத்த கருத்துக்கள் என்றுமே மக்கள் மனதில் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில், அவருடைய கடைசி திரைப்படமான ‘லாபம்’ படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலால் திரையரங்கங்கள் மூடப்பட்டதால் ‘லாபம்’ படத்தை ஒடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், தற்போது தமிழகத்தில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ‘லாபம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், ‘லாபம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும், என்பது மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பெரும் ஆசையாம். காரணம், இது பாமரர்களுக்கான படம், எனவே இந்த படத்தை திரையரங்குகளில் தான், வெளியிட வேண்டும், என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அடிக்கடி சொல்லி வந்த நிலையில், அவருடைய விருப்பத்தை தயாரிப்பாளராக விஜய் சேதுபதி இன்று நிறைவேற்றியுள்ளார்.
படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பதற்காக ‘லாபம்’ படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில், மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திருவுருவப் படத்திற்கு படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குநரும் என்னுடைய தலைவருமான இயக்குநர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
”சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாய பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னே.. பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே.. இந்த கிராம பகுதியில் நடக்கிற விவசாயத்தை பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா.. அவன் எப்பவோ எடுத்துட்டு போய் இருக்கலாம். ஆனா இந்த மண்ணுல முன்னூறு நானூறு வருஷமா பருத்தியை எடுத்து கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால.. இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு.. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது இந்த கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்து தான் கிடைக்கிறது.
பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்த பொருளாக இருந்தாலும் சரி வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.
அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்து பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்து தான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்கு தெரியல அதைதான் இந்த படம் சொல்லுது.”என்றவர், தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...