ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது அப்பெண் புகார் அளித்தார். பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட இந்த புகாரை தமிழக காவல்துறை விசாரித்து வந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நடிகர் ஆர்யா பெயரை வைத்து வேறு இரண்டு பெயர், அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிவித்த போலீசார், இரண்டு பேரை கைதும் செய்தது. இதனால், நடிகர் ஆர்யா மீது எந்த தவறும் இல்லை, என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு, ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக காவல்துறை, வழக்கை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியதோடு, ஆர்யா தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து, அவருக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம், என்று தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், நடிகர் ஆர்யா விரைவில் கைது செய்யப்படலாம், என்றும் கூறப்படுகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...