Latest News :

கார்த்திக்கு ஜோடியான இயக்குநர் ஷங்கர் மகள்!
Tuesday September-07 2021

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யா, தனது தம்பியும் நடிகருமான கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தயாரித்தார். பாண்டிராஜ் இயக்கிய அப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்.

 

கார்த்தி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கொம்பன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் படம் என்பதால் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘விருமன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் நடிகர் சிவகுமார், லட்சுமி சிவகுமார், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.இ.ஞானவேல்ராஜா, ஆர்.எஸ்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, சிறுத்தை சிவா, சுதா கோங்க்ரா, பாண்டிராஜ், முத்தையா, ஜெகன், த.செ.ஞானவேல், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

கிராமத்து பின்னணியில் உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.

 

முதல் படத்திலேயே கனமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள அதிதி ஷங்கர், இப்படத்திற்காக முழு அளவில் தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார். வெங்கட் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

 

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related News

7717

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery